நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளை அடித்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார். அவர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து இரவு நேர பணியில் ஆர்வம் காட்டி வந்த அவர், இரவில் கூட்டாளிகளுடன் சேர்ந்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. நெல்லை மற்றும் பெருமாள் புரத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் […]
