மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் கண்டக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வன்னியம்பட்டி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜ் மதுரை- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கோவிந்தராஜன் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கோவிந்தராஜன் சகோதரர்களான பழனிச்சாமி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
