ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இங்கு காவலாளி நியமிக்கப்படவில்லை. நேற்று காலை ஏ.டி.எம் மையத்தின் கதவு திறந்து கிடந்ததால் பொதுமக்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கடப்பாறை கம்பியால் மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் கூறும் […]
