ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் அமைந்துள்ள உத்தர பிரதேசத்தில் நேற்று நவராத்திரியை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த கூரை திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதில் 4-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]
