கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வானதிராயன்பட்டி கிராமத்தில் போதும்பொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள கிணற்றிற்கு குளிப்பதற்கு செல்வதால் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் போதும்பொண்ணு கிணற்றில் இறங்கி குளிக்கும் போது நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]
