சென்னையில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதி உயிரிழந்த நிலையில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலக காலனி காவல் துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு கெல்லீஸ் சிக்னல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்து பார்த்தனர். அப்போது அதில் பயணம் செய்த இரண்டு பேர் 500 கிராம் கஞ்சா, ஒரு அரிவாள் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் திருவல்லிக்கேணியில் […]
