சென்னையில் நடந்த போராட்டத்தில் கற்களை வீசி இரயிலை தாக்கிய புகாரில் பாமகவினர் 350 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வன்னியர் சமூகத்தினர் 80களில் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக 89ஆம் ஆண்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு வன்னியர் உள்ளிட்ட ஜாதியினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் மிக பிற்பட்டோர் மக்கள் தொகையில் 75% இருக்கும் வன்னியருக்கு 7 முதல் 8 சதவீதம் அளவு வரையில் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்கிறது. […]
