உத்தரகாண்ட் மாநிலம், கார்வால் கோட்டம் காவல்துறைத் துணைத்தலைவர் நீரு கார்க் கண்டோலியா பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டருகில் உள்ள ஆப்பிள் மரத்தை குரங்குகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும்; இல்லையெனில் நடவடிக்கை பாயும் எனவும் அங்குள்ள காவலர்களுக்கு உத்தரவிட்டு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தரகாண்ட் முதன்மை உள்துறை செயலாளருக்கு முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அமிதாப், புகார் கடிதம் எழுதியுள்ளார். […]
