போலீஸ் தேர்வுக்கு யூடியூப் வழியாக பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசு துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்த பயிற்சியின் தன்மையை விரிவுபடுத்தவும், மூலை முடுக்கெல்லாம் உள்ளவர்களுக்கு சென்றடைய வேண்டுமென்ற எண்ணத்திலும் இந்த கல்லூரியின் சார்பாக youtube சேனல் ஆரம்பிக்கப்பட்டு அதில் பயிற்சி காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது […]
