சென்னையை அடுத்த புழல் அருகே போலீஸ் தாக்கியதாக கூறி தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புழல் பாலவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சீனிவாசன் என்பவர் வாடகைக்கு இருந்துள்ளார். வடக்கை பிரச்சினை தொடர்பாக உரிமையாளர் ராஜேந்திரன் அளித்த புகாரில் காவல் ஆய்வாளர் பென்ஷாம் சீனிவாசனிடம் விசாரணை நடத்தியதாகவும் அப்போது சீனிவாசனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சீனிவாசன் தீக்குளித்ததோடு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த […]
