ஆட்டோ ஓட்டுனர்களை போலீஸ் சூப்பிரண்டு கடுமையாக எச்சரித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆட்டோ டிரைவர்களை நேரில் சந்தித்து பேசினார். அவர் ஆட்டோ ஓட்டுனர்களிடம் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி விபத்து இல்லாமல் வாகனங்களை ஓட்டுமாறு அறிவுரை வழங்கினார். அதன்பிறகு முறப்பநாடு பகுதியில் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி சென்றதால் தான் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான் எனவும் கூறினார். அந்த 4 வயது குழந்தை பள்ளிக்கு சென்ற […]
