பட்டியலின மக்களைப் பற்றி அவதூறு பரப்பிய குற்றத்திற்காக நடிகை மீராமிதுன் கைது செய்யப்பட்டார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டு காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில் சிலகாலம் கையெழுத்திட வராததால் ஜாமீனை ரத்து செய்துவிட்டு உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மீரா மிதுன் பெங்களூருவில் இருப்பதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
