சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், சைக்கிளில் செல்பவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அக்கறை சந்திப்பு முதல் முட்டுக்காடு வரை தனி வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு பகுதியில் காலையில் சைக்கிள் பயணம் மூலம் ஏராளமானோர் உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். அவ்வாறு உடற்பயிற்சியை மேற்கொள்பவர்கள் பாதுகாப்பாகவும், வாகனங்களின் வேகத்தால் பயமில்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கும், கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்வதற்காக பாதுகாப்பான வழி அமைப்பதற்கும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆணையிட்டிருந்தார். […]
