நெல்லையில் காப்பகங்களுக்கு போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார். திருநெல்வேலி மாவட்ட போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் தலைமையில் கடந்த 16-ஆம் தேதி அனைத்து காப்பக நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது காப்பகங்களில் தங்கியிருப்பவர்களுக்கு தேவையான உடை, பாதுகாப்பு, தண்ணீர் வசதி, விளையாட்டு உபகரணங்கள், கணினி வசதி, போர்வைகள், படுக்கை வசதி போன்றவை குறித்து கேட்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் நன்கொடையாளர்கள் மூலம் காப்பக நிர்வாகிகளின் […]
