பெரம்பலூரில் லஞ்ச வழக்கில் கைதான காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பெரம்பலூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பால்ராஜ் (48). இவர் பெரம்பலூர் ராம்நகர் பகுதியில் வசித்து வரும் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கல் குவாரியில் இருந்து அதிக பாரங்கள் ஏற்றி வந்த 2 லாரிகளை விடுவிப்பதற்காகவும், நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதற்காகவும் அவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த 20-ஆம் தேதி பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு வந்த கல் குவாரி ஊழியர் ஜார்ஜ்பெர்ணான்டஸ், […]
