விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “வலையப்பட்டி பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழா பல ஆண்டுகளாக சுமுகமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழாவை ஆகஸ்ட் 19, 20இல் நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதி கோரினோம். இதுவரை பதில் இல்லை. எனவே, திருவிழா நடத்த அனுமதி வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ” கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி […]
