விற்பனைக்காக வைத்திருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள பாண்டி கோவில் மலை அடிவாரத்தில் சந்தேகப்படும்படி 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டை சோதனை […]
