போலீஸ் என்று தெரியாமல் குடிபோதையில் வாலிபர்கள் கலாய்த்ததால் காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் ராமலிங்கம். இவர் மாம்பலம் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராமலிங்கம் கடையில் மருந்து வாங்கி விட்டு தி.நகர் பேருந்து நிலையம் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் அவ்வழியாக வந்த வாலிபர்கள் ராமலிங்க மீது மோதி உள்ளனர். எனவே ராமலிங்கம் அவர்களைப் பார்த்து செல்லுமாறு கூறியுள்ளார். […]
