சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகள் 16 பேர் தங்கள் பயங்கரவாத தாக்குதலை கைவிட்டு நேற்று போலீசில் சரணடைந்தனர். மேலாதிக்கம் உள்ளவர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்திவரும் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர், மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் பொதுமக்கள், மற்றும் காவல் துறையினரின் மீது அவ்வப்போது பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். […]
