தேனி மாவட்டத்தில் மாந்தோப்புக்கு சென்ற விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் நாகராஜன்(59) என்பவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு போடி அருகே உள்ள மங்கலகோம்பை பகுதியில் சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல நாகராஜன் மாந்தோப்புக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் நாகராஜனை தேடி மாந்தோப்புக்கு […]
