காரில் மது பாட்டில்களை கடத்திய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அண்ணா நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனாலும் அந்த கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனால் போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து சென்றதால் மர்ம நபர்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் காரில் […]
