குடிபோதையில் தகராறு செய்தவரை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் அருகிலுள்ள கோண வாய்க்கால் பகுதியை சேர்ந்த கந்தசாமி. கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா அந்த வழியாகசென்ற பொதுமக்களிடம் குடிபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதைக்கண்ட கந்தசாமி, டேவிட் ராஜாவிடம் எதற்கு சாலையில் செல்பவரிடம் தகராறு செய்து கொண்டிருக்கிறாய் என்று தட்டிக் கேட்டுள்ளார். இதில் […]
