தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் சமீபத்தில் இருவர் உயிரிழந்தனர். இதனால் போலீஸ் லத்தி பயன்படுத்துவது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. எனவே லத்தி பயன்படுத்த அதிகாரிகள் தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கன்னியாகுமரி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தையடுத்து பெரிய அளவில் கலவரம் வெடித்தது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 160 க்கும் மேற்பட்ட போலீசார், அதிகாரிகள் தாக்கப்பட்டனர். […]
