ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதியின் உத்தரவின்படி, ஜவுளிசந்தை, பன்னீர்செல்வம் பூங்கா, ஈரோடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் துண்டு பிரசுரங்கள் வழங்கியுள்ளனர். அதில் மோசடி நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கியுள்ளது. மேலும் ஈமு கோழி, நாட்டுக்கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு திட்டம், மாதத் தவணையில் வீடு மற்றும் மனை வாங்கும் திட்டம், அங்கீகாரம் பெறாத நிறுவனங்களின் தங்க நகை சேமிப்பு திட்டம் […]
