சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி நைனாக்காடு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஶ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அனுஸ்ரீக்கு கௌதம் நந்தா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கௌதம் அவரது தந்தை தங்கராஜ், தாய் அருள்மணி ஆகியோர் வரதட்சனை கேட்டு அனுஶ்ரீயை துன்புறுத்தியுள்ளனர். இதனால் அனுஸ்ரீ தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். மேலும் விவாகரத்து கேட்டு கணவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. […]
