தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் துணி, இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட பல வகையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடை விற்பனையாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திகைத்து வருகின்றனர். சென்னையில் தண்டையார்பேட்டை, டி.நகர், புரசைவாக்கம், பாடி, குரோம்பேட்டை ஆகிய பகுதியில் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதனை போல மதுரை, கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களிலும் கடைத்தோறும் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த […]
