விக்கிரவாண்டியில் மணல் லாரியை ஏற்றி போலீசாரை கொல்ல முயற்சி செய்த 4 பேரையும் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினமும் போலீசார்களும் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் பனையபுரத்திலுள்ள திருக்கனூர் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் லாரியை நிறுத்துமாறு கை காட்டிய போது அவரின் மீது ஏற்றுவது போல் வேகமாக வந்துள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் உஷாராக அங்கிருந்து […]
