போலி வனத்துறை அதிகாரியாக நடித்து பெண்ணை திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகரில் ஏங்கல்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அனுமந்தன்பட்டி சேர்ந்த ஹர்சிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஹர்சிலாவை பெண் பார்க்க சென்றபோது ஏங்கல்ஸ் தன்னை ஒரு வனத்துறை உயர் […]
