சென்னை கொளத்தூரில் வசித்து வரும் சாந்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அவற்றில், ரம்யா, வக்கீல் பாபு போன்றோரிடம் இருந்து தன் மகனை மீட்டுத் தரக்கோரி அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது சென்னை அண்ணா நகரை சேர்ந்த பாபு ஒரு போலி வக்கீல் என்பது தெரியவந்தது. அதாவது பாரதிதாசன் பல்கலையில் சட்டப்படிப்பு படித்ததாக போலியான சான்றிதழை அவர் சமர்ப்பித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலி வக்கீல் பாபுவை கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. […]
