போலி ரசீது சீட்டு தயார் செய்து 12 லட்சம் ரூபாய் மோசடி செய்தது குறித்து 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள பாரதியார் நகரில் கௌதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பம் நெல்லிகுத்தி தெருவிலும், காமயகவுண்டன்பட்டியிலும் அடகு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த இரண்டு கடையின் கணக்கு வழக்குகளை கார்த்திகா என்று பெண் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் உரிமையாளர் கவுதம் திடீரென கடையின் […]
