சட்டவிரோதமாக மதுபானம் தொழிற்சாலையை நடத்தி வந்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஆத்துமேடு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தொழிற்சாலையை நடத்தி மது விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாசோமசுந்தரம் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாரதிமோகன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் மற்றும் மாரண்டஅள்ளி காவல்துறையினர் ஆத்துமேடு […]
