போலி டாக்டர் அளித்த சிகிச்சையால் நோயாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் டி.எம்.ஜி. நகரில் வசிக்கும் டாக்டர் மணிகண்டனிடம் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து நேற்று ஆறுமுகத்திற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் வழக்கம் போல் டாக்டர் மணிகண்டனிடம் சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது டாக்டர் மணிகண்டன் ஆறுமுகத்திற்கு ஊசி போட்டு மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்துள்ளார். […]
