ட்விட்டரில் போலியான கணக்குகளை எச்சரிக்கை இல்லாமல் நிரந்தரமாக நீக்கிவிடுவோம் என்று எலான் மஸ்க் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவராகவும் டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைவராகவும் இருக்கும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு அதிரடியாக பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். இதற்கிடையில் விளையாட்டு, சினிமா மற்றும் அரசியல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் பெயரில் போலியாக சிலர் கணக்குகள் தொடங்குகிறார்கள். இவ்வாறான போலி கணக்குகளால் ட்விட்டர் மீது இருக்கும் […]
