சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றால் 2 வருடங்களுக்கு பின் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் இந்த வருடம் சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஐயப்பனை தரிசனம் செய்ய ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் உடனடி தரிசன பதிவு மூலமாக அதிகப்படியான பக்தர்கள் வருகின்றனர். […]
