முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என நம்பப்பட்டுவந்த நோய்கள் இப்போது மீண்டும் தலைதூக்கத் துவங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகளைத் தாக்கி நிரந்தரமாக உடற்குறைபாட்டையோ அல்லது மரணத்தையோ ஏற்படுத்தி விடும் போலியோ எனும் நோய்க்கிருமிகள் அண்மை காலமாக கண்டுபிடிக்கப்பட்டு வரும் விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பிரித்தானியாவில் 40 வருடங்களுக்கு பிறகு போலியோ நோய்க் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி அமெரிக்க நகரமான நியூயார்க்கில் கழிவுநீரில் மேற்கொண்ட ஆய்வில் போலியோ […]
