தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றிய சீனிவாசன் என்பவர் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை போலியாக கொடுத்து வேலையில் சேர்ந்ததால் கடந்த 2003ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை வேலூர் தொழிலாளர் நல நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், போலி சான்றிதழ் கொடுத்ததாக என்னை மட்டும் பணி நீக்கம் செய்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் போலி சான்றிதழ் கொடுத்து, சிறிய தண்டனைகளுடன் பணியில் தொடர […]
