சுமார் லட்சக்கணக்கானோர் போலந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். போலந்து அரசு ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பிலிருந்து விலகுவது “போலெக்ஸிட்” என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து போலந்து நாடு வெளியேறினால் பல்வேறு பொருளாதார சிக்கல்கள் ஏற்படும். எனவே இதனை கண்டித்து நூற்றுக்கணக்கான இடங்களில் நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்டோர் போலெக்ஸிட் பயத்திற்கு மத்தியில் அந்நாட்டில் […]
