இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவை கைது செய்ய சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தினர். மேலும், கடந்த ஒன்பதாம் தேதி அன்று போராட்டக்காரர்கள் அதிபரின் மாளிகைக்குள் புகுந்ததால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டில் இருந்து தப்பினார். அவர் குடும்பத்தினருடன் மாலத்தீவிற்கு சென்ற நிலையில் தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருக்கும் தென்னாப்பிரிக்க நாட்டின் மனித உரிமைகள் குழு, அவர் மீது […]
