உக்ரைன் ராணுவத்தின் ஏவுகணைதாக்குதலில் சிக்கி கடலில் மூழ்கிய ரஷ்யாவின் அதிநவீன மாஸ்க்வா போர்க் கப்பலின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கருங்கடலில் ரஷ்யாவின் அதிநவீன போர்க் கப்பலான மாஸ்க்வாவை ஏவுகணையால் தாக்கி அழித்ததாக உக்ரைன் அறிவித்தது. அதேநேரம் மாஸ்க்வாவில் தீ விபத்து ஏற்பட்டு வெடி மருந்துகள் வெடித்து சிதறியதாகவும், கப்பலை துறைமுகத்திற்கு கட்டியிழுத்து செல்லும் வழியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியதாகவும், கப்பலில் பயணித்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் […]
