மொபட் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கணவர் கண் எதிரே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் வசித்து வருபவர்கள் கலியன்-குப்பு தம்பதியினர். கணவன் மனைவி இருவரும் மொபட்டில் போரூருக்கு பயணம் மேற்கொண்டனர். அப்போது போகும் வழியில் பனமலைபேட்டையில் மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொண்டு சென்று உள்ளனர். இந்நிலையில் அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த போது டிராக்டர் ஒன்று எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி இருவரும் கீழே […]
