நாம் கடைப்பிடித்த சுய ஊரடங்கை வெற்றியாக கருதாமல் மிகப்பெரிய போராட்டத்தின் ஒரு தொடக்கமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பகுதியில் மக்கள் ஊரடங்கு நேற்று 9 மணியுடன் நிறைவு பெற்றது என்றும், ஆனால் இதை நாம் கொண்டாடி முடிக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை ஒரு வெற்றி என்றும் யாரும் கருதக்கூடாது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் நம்முடைய மிகப் பெரிய போராட்டத்திற்கு இது ஒரு தொடக்கம்தான் என்று குறிப்பிட்டுள்ளார். […]
