நாடு முழுவதும் விவசாயிகள் நாளை பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். […]
