ஈரான் நாட்டில் ஒரு இளம் பெண் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தால் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பிரபலம் போலீஸ் காவலில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றும் நாடுகளில் ஒன்றாக ஈரான் இருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டின் தெஹ்ரான் நகரத்தில் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டதில் மாஷா அமினி என்ற 22 வயது பெண் பலியானார். இதனை எதிர்க்கும் வகையில் நாடு முழுக்க பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]
