ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊராட்சிக்கோட்டையில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் மின்வாரிய ஒப்பந்த அடிப்படியில் உள்ள தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அதில் நீர்மின் உற்பத்தி வட்டத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து பணிபுரியும் தொழிலாளர்களை வேலை துண்டிப்பு செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மேலும் மின் வாரியத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 412 ரூபாய் கூலியை பிடித்தம் […]
