பாஜக, பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் போது பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டது குறித்து ஆளுநரிடம் முறையிட முடிவெடுத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த போது, அவரது வாகன வரிசை செல்வதற்கு இடமில்லாமல் போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பிரதமர் மோடி சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக அங்கு காத்து நிற்க வேண்டிய நிலை உருவானது. எனவே, அவரின் பாதுகாப்பு அங்கு கேள்விக்குறியானது. தற்போது இப்பிரச்சனை, பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. […]
