மது கடையை மூடக்கோரி பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் மூடப்படாததால் கலெக்டரிடம் அவர்கள் மனு கொடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொருவளூர் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியாக அமைந்திருக்கும் சாத்தனூர் வலதுபுற கால்வாய் அருகாமையில் டாஸ்மாக் கடை அமைந்திருக்கிறது. இந்நிலையில் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த 2 வருடங்களாக பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் மதுக்கடைகள் மூடப்படவில்லை. இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இம்மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர். […]
