சென்னையில் வாட்ஸ்அப் குழு அமைத்து கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரையை விற்ற பட்டதாரி பெண் உட்பட ஆறு பேர் சேர்ந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாநகரில் போதை மாத்திரைகளை வெளிமாநிலங்களில் இருந்து கூரியர் மூலம் கடத்தி விற்பனை செய்யும் கும்பல் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இந்தக் கும்பல் வலி நிவாரணி மாத்திரை என்ற பெயரில் போதை மாத்திரைகளை விற்பதாக தெரிந்தது. மேலும் சட்டவிரோதமாக மாத்திரைகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாகவும் வாட்ஸ் […]
