சட்ட விரோதமாக போதைப் பாக்குகள் மற்றும் மது விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே ஆனைபொத்தை பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போதைப் பாக்குகள் விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து வடசேரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போதைப் பாக்குகளை பறிமுதல் செய்து நாகராஜனையும் கைது செய்தனர். இதேப்போன்று வெள்ளமடம் பகுதியிலும் போதை பாக்குகள் விற்பனை […]
