கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்த வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் சிலர் சுற்றுலா பயணிகளுக்கு காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் கலையரங்கம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி, அகஸ்டின் […]
