தீவிர வாகன சோதனையின் போது காவல்துறையினரால் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் வடசேரி காவல்துறையினர் ஆம்னி பேருந்து நிலையம் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றிக் கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த விபின், அருண் துளசி, ஷாஜி என்பது தெரியவந்தது. இவர்கள் பெங்களூருவிலிருந்து ஆம்னி பேருந்து மூலமாக நாகர்கோவிலுக்கு வந்துள்ளனர். இவர்கள் கையில் இருந்த […]
